Categories
உலக செய்திகள்

மறைந்த புகைப்பட செய்தியாளர்…. இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர்…!!

தாலிபான்கள் வன்முறை தாக்குதல் நடத்தியதில் புகைப்பட செய்தியாளர் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் அவர்களின்  கைவசம் கொண்டு வந்துள்ளதை அடுத்து அங்கு அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் வலுப்பெற்றது. அதில் கந்தகார் பகுதியில் ஸ்பின் போல்டக் இடத்தில் தலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஸ் சித்திக் கொல்லப்பட்டார். மேலும் இவர் கொரோனா காலகட்டங்களில் கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிக்கப்படுவதை  தனது புகைப்படத்தின் வாயிலாக உலகிற்கு தெரிவித்தவர். இவர் ரோஹிங்கியா இனப்படுகொலை நேரத்தில் மக்கள் புலம் பெயர்ந்த காட்சிகளை புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தியதற்காக புல்லிட்சர் விருது பெற்றவர் ஆவார். இவரது இறப்பிற்கு இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் பரித் மமுந்த்சாய்  தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் “இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் நான் அவரை காபுலில் சந்தித்தேன். சித்திக் பாதுகாப்பு படையில் இருக்கும் வேளையில் அவர் கொல்லப்பட்டிருப்பது மிகவும் சோகமானது. என் நண்பனின் இறந்த செய்தி கேட்டு கலங்கி நிற்கிறேன் என்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் ராய்ஸ்டர் நிறுவனத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் சித்திக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் சித்திக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “பயங்கரவாதத்தையும் வன்முறைகளையும் எந்த வடிவில் இருந்தாலும் அதை அப்புறப்படுத்த வேண்டும். தனது புகைப்படங்களின் வாயிலாக உலகிற்கு கொரோனாவின் பயங்கரத்தை காண்பித்தவரின்  இறப்பு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |