கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் மும்பையில் பெய்த கனமழையால் செம்பூரில் உள்ள பாரத் நகர் குடிசை பகுதியில் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 11 பேர் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை வெள்ளம் போல் மும்பையிலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
Categories
BREAKING: மரணம் மரணம்…. சென்னையை போல் மும்பை மூழ்கியது…. அதிர்ச்சி…..!!!!
