ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் . விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Being a stage performer to #Muqabula song to Backup dancer among 500+ people in #Boys, I've admired @shankarshanmugh Sir alot. Now, being the main choreographer to his film with my fvt. Hero, person #RamCharan Sir #RC15 feels unbelievable. Thank you for believing in me Sir 😍 pic.twitter.com/W6uCWU8Kt8
— Jani Master (@AlwaysJani) July 17, 2021
இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ், காதலன் போன்ற படங்களில் ஜானி மாஸ்டர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜானி மாஸ்டர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.