Categories
விளையாட்டு

‘நான் ஜப்பானில் இருக்க விரும்புகிறேன்’ …. மாயமான ஒலிம்பிக் வீரர் …. தேடும் பணியில் போலீசார் ….!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற உகாண்டா அணி வீரர் ஒருவர் மாயமானதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 -ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் உகண்டா அணியில் பளுதூக்கும் வீரரான ஜூலியஸ் செகிடோலெக்கோ என்பவர்  ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு மேற்கு ஜப்பானில் உள்ள  இசுமிசானோ என்ற நகரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .அப்போது கொரோனா  பரிசோதனைக்காக வீரர்களை அழைத்தபோது செகிடோலெக்கோ  காணாமல் போனது தெரியவந்தது.

இந்நிலையில் அவர் உகண்டாவில் வாழ்வது கடினமாக இருப்பதாகவும் ,இதனால் ஜப்பானில் தங்கி வேலை செய்ய விரும்புவதாக கடிதம் ஒன்றை  எழுதி விட்டுச் சென்றுள்ளதாக தெரிகிறது .மேலும் அவர் மத்திய ஜப்பானில் உள்ள நகோயாவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செகிடோலெக்கோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெறவில்லை என்பதால், அடுத்த செவ்வாயன்று அவர்   உகாண்டாவிற்கு  திரும்ப வேண்டிய நிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |