சிறுமியை கடத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு தப்பி செல்ல துணையாக இருந்த அவரின் அண்ணையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.மலையனூர் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இவர் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அப்போது அய்யப்பனுக்கு காலில் காயம் பட்டி இருந்ததினால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையிடம் அய்யப்பன் சிறுநீர் கழித்து விட்டு வருவதாகக் கூறி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதன்பின் அய்யப்பனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆசனூர் பகுதியில் பதுங்கி இருந்த அய்யப்பன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அய்யப்பன் தப்பி செல்வதற்கு உதவியாக இருந்த அவருடைய அண்ணன் ஆறுமுகத்தையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.