Categories
மாநில செய்திகள்

அபராதம்… தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பல மாவட்டங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தலைமை செயலாளர், பொதுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையடுத்து திங்கள்கிழமை முதல் 31ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதில், திருமணம் உள்ளிட்ட சுப காரிய நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மாஸ்க் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |