தேனி மாவட்டத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கைலாசபட்டியில் ரேசன்கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசிகள் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அரிசி எவ்வித பிரயோஜம் இல்லை என வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து நேற்று அப்பகுதி மக்கள் பெரியகுளம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த தென்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தரமான அரிசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதற்கு பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.