அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு சென்று புவியீர்ப்பு விசை இல்லாத பகுதியில் மிதக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜெப் பெசோஸ் வரும் 20ஆம் தேதியன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இவர் தனக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி நிறுவனத்தின் மூலம், தன் சகோதரர் மார்க் பெசோஸ் மற்றும் அமெரிக்க நாட்டில் 82 வயதுடைய மூத்த பெண் விமானி (ஓய்வு பெற்றவர்) போன்றோருடன் பயணம் மேற்கொள்கிறார்.
ஆனால் அதற்கு முன்பாகவே, கடந்த 11 ஆம் தேதியில், பிரிட்டன் நாட்டின் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் ஐந்து நபர்கள் கொண்ட குழுவுடன் தன் சொந்த நிறுவனம் விர்ஜின் கேலடிக் மூலம் விண்வெளியில் 90 கிமீ பயணித்து சாதித்துவிட்டார்.
எனவே தற்போது ஜெப் பெசோஸ் 20ஆம் தேதியன்று மேற்கொள்ளப்போகும் பயணத்தில், சர்வதேச விண்வெளி மையம் வரையறுத்த எல்லை வரைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் 0 அளவு புவியீர்ப்பு விசையில் மிதப்பார்களாம்.