Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழக பாஜக தலைவராக….. அண்ணாமலை பதவியேற்பு….!!!!

தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் புதிய தலைவராக கே. அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநில தலைவராக முறைப்படி கமலாலயத்தில் இன்று  அண்ணாமலை பொறுப்பேற்று கொண்டார்.  கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த அவருக்கு, வழியில்  பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு  கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்று கொண்டார் . அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி, தேசிய இன பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Categories

Tech |