ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீலம் புரெடக்ஷன்ஸ், K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
https://twitter.com/arya_offl/status/1415910234510422019
இந்த படத்தில் நடிகர் ஆர்யா கபிலன் என்ற குத்து சண்டை வீரராக நடித்துள்ளார் . சமீபத்தில் இந்த படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெற்ற ‘நீயே ஒளி’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வருகிற ஜூலை 22-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் இந்த படம் வெளியாகவுள்ளது .