அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இது இவரது 60-வது படமாகும். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர் . மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
.jpg?LPSwNj8QTn9PRmoJ0nNDc3RAJtde9mb9&size=770:433)
தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் வலிமை படக்குழு அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . அதன்படி இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.