Categories
பல்சுவை

உங்க போன் மழையில் நனைத்து விட்டால்…. உடனே இத பண்ணுங்க போதும்…..!!!!

அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பலர் கனமழையில் நனைந்து கொண்டு தான் வெளியே போக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் நமது அத்தியாவசிய தேவையான மொபைல் போனை எவ்வாறு கனமழையில் இருந்து பாதுகாப்பது?. அப்படி நாம் வெளியே செல்லும் போது, மொபைல் போன் மழையில் நனைந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்விகளும் நமக்குள் எழும். மொபைல் போனை மழையில் உபயோகிப்பது எப்படி?

*மழையில் வெளியே செல்ல நேர்ந்தால் மொபைல் போனை, தண்ணீரில் நனையாத பவுச்சில் போட்டு எடுத்துச் செல்ல வேண்டும்.

*மொபைல் போன் ஒருவேளை தண்ணீரில் நனைந்து விட்டால், உடனடியாக அதன் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு உள்ளிட்டவைகளை முழுவதுமாக கழற்றி காய வைக்க வேண்டும்.

*போன் முழுவதுமாக காய்ந்தவுடன் சுத்தமான துணியை வைத்து போனை துடைக்க வேண்டும்.

*ஹேர் டிரையர் வைத்து மொபைல் போனை காய வைக்க கூடாது. இதனால் போனுக்கு ஆபத்து நேரிடலாம். இது போனை எரித்து விடவும் செய்யும்.

*மொபைல் போனை ஈரமாக இருக்கும் அரிசியில் போட்டு வைத்தால் அதன் ஈரத்தை அரிசி எடுத்து விடும்.

*மொபைல் போன் ஈரமாக இருக்கும் போது அதனை சார்ஜ் செய்ய கூடாது.

*இடி, மின்னல் போன்றவற்றில் சற்று உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில், மின்னல் தாக்கி போன் செயலிழந்து போவதுடன் நமக்கும் ஊரு விளைவிக்கும்.

Categories

Tech |