ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் டோக்கியோவின் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு விளையாட்டு வீரர்கள் டோக்கியோவிற்கு வரும் சூழலில் பெரும் சவாலாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜப்பான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் டோக்கியோவில் ஓட்டல் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோன உறுதியாகி உள்ளதால் வீரர் வீராங்கனைகள் பீதி அடைந்துள்ளனர். பிரேசிலின் ஜூடோ அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் 8 ஊழியர்களுக்கு உறுதியாகி உள்ளது. இதையடுத்து கொரோனா இல்லாத ஊழியர்கள் மட்டுமே வீரர்களுக்கு சேவையாற்றுவதாக ஜப்பான் விளையாட்டுதுறை தகவல் தெரிவித்துள்ளது