இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள ஷெர்ஷா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் குறும்பு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். இதையடுத்து இவர் அஜித்தை வைத்து பில்லா என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதன்பின் இவர் சர்வம், ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது இயக்குனர் விஷ்ணுவர்தன் முதல் முறையாக பாலிவுட் படத்தை இயக்கியுள்ளார் . ஷெர்ஷா என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் கார்கில் போரை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
I am thrilled as we bring to you the true story of the Kargil War hero – Captain Vikram Batra (PVC) with #ShershaahOnPrime. Coming out on 12th August only on @primevideoin.#Shershaah @SidMalhotra @Advani_Kiara @karanjohar @apoorvamehta18 @b_shabbir @aishah333 @harrygandhi pic.twitter.com/GHJy43fe5P
— vishnu varadhan (@vishnu_dir) July 15, 2021
பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ரா என்ற ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். கியாரா அத்வானி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் தர்மா புரோடக்சன்ஸ் மற்றும் காஷ் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளது . இந்நிலையில் ஷெர்ஷா படத்தின் அதிரடியான டீஸருடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.