சொந்த வீடு கட்டுவது என்பது பலருடைய கனவாக இருக்கிறது. அப்படி சொந்த வீடு கட்டுபவர்களுக்கு கனவில் இருப்பவர்களின் கனவை நனவாக்கும் விதமாக ஒவ்வொரு வங்கிகளும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வீடு கட்ட நினைப்பவர்கள் எந்த வங்கியில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது என்று தான் விசாரிப்பார்கள். அந்த வகையில் எந்தெந்த வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது.
இந்நிலையில் வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் 6.90 சதவீதத்திலிருந்து 6.6.6 சதவீதமாக குறைத்துள்ளது இந்த குறிப்பிட்ட வட்டி வீதம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. பஞ்சாப் சிந்த் பேங்க் மற்றும் கோடக் மகேந்திரா பேங்க் 6.65 சதவீத வட்டிக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.