தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடைகள், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆடிமாத பிறப்பையொட்டி மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பூக்கடையில் பூஜைக்கான பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.600, சாமந்தி பூ ரூ. 150, அரளிப்பூ ரூ.800 க்கு விற்பனையாகிறது. மேலும் நாளையும் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.