சமீபகாலமாக தமிழ்நாட்டில் இருந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விக்கு இந்தியில் பதிலளிக்கபட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜா எனும் சமூக ஆர்வலர் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஏதாவது இருக்கிறதா? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அலுவல் மொழித்துறை இந்தியாவிற்கு என்று தேசிய மொழி எதுவும் கிடையாது என்று கூறியுள்ளது. மேலும் இந்தியில் பதில் அளிப்பதால் எந்த தண்டனையும் கிடையாது என்றும் அலுவல் மொழித் துறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
Categories
இந்தியாவிற்கு தேசிய மொழி கிடையாது… மத்திய அலுவல் மொழித் துறை பதில்…!!!
