Categories
தேசிய செய்திகள்

“எல்லா பணத்துக்கும் ஆடம்பர பொருள் வாங்கிட்டேன்”… ஏலச்சீட்டு நடத்தி… ரூ.40 லட்சம் மோசடி… அதிர்ச்சியில் மக்கள்…!!!

மைசூரில் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து 40 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

மைசூர் மாவட்டம் ஹாசானை சேர்ந்த ஹேமலதா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூரு உதயகிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியேறினார் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் நன்றாக பேசி தான் ஏலச்சிட்டு நடத்துவதாகவும், உங்கள் பணத்தை என்னிடம் சேமித்து வைத்தால் அதற்கு வட்டி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி அந்த பகுதி மக்கள் அவரிடம் பணம் கட்டி வந்துள்ளனர். இவ்வாறு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 40 லட்சம் வரை அவரிடம் பணத்தைக் கொடுத்து உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹேமலதா திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் தாங்கள் ஏமாந்தது உணர்ந்த மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் விசாரணை செய்த காவல்துறையினர் ஹேமலதா அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று அவரை கைது செய்தனர் .அவரிடம் நடத்திய விசாரணையில் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி ஏமாற்றிய பணத்தை தனது ஆடம்பரத்திற்காக செலவழித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |