ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி என்ற படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீசாக உள்ளது.
The effort behind creating the ultimate theatrical experience is here!
Watch the making of #RRRMovie here 🔥🌊 https://t.co/A27oTfLPp1#RoarOfRRR @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @mmkeeravaani @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @DVVMovies
— RRR Movie (@RRRMovie) July 15, 2021
இந்த படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் அதிரடியான மேக்கிங் வீடியோவுடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. தற்போது இந்த மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.