Categories
மாநில செய்திகள்

“நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன”…. பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து..!!

 நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதல்வர்  பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தனது  69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது  பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image result for பன்னீர்செல்வம் மோடி

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்,  அதில் குறிப்பிட்டதாவது,  உங்களது 69வது பிறந்த நாளில் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு சிறப்பாக சேவை செய்யவும், நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். உலகத்திலேயே இந்தியாவில் முதன்மை நாடாக மாற்றுவதற்கு நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன் என்று  அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ட்விட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |