அமேசான் நிறுவனரின் சொந்த விண்வெளி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நிறுவனமான அமேசானின் நிறுவனர் மற்றும் முன்னாள் CEO வாக ஜெப் பெசோஸ் என்பவர் இருந்தார். இவர் சொந்தமாக ப்ளூ ஆர்ஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை உருவாக்கியிருந்தார். இந்த ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவுள்ளது.
எனவே நியூஷெப்பர்ட் என்ற விண்கலத்தை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா விமான போக்குவரத்து அமைப்பானது, மனிதர்களை நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்ப, இந்த ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்திற்கு உரிமம் அளித்திருக்கிறது. எனவே வரும் ஜூலை 20ம் தேதி அன்று ஜெப் பெசோஸ், இந்த விண்கலத்திற்கான பரிசோதனையில் விண்வெளி செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.