Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : நாடாளுமன்ற தேர்தலும் , மோடியின் அதிரடியும் …!!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

பிரதமர் பதவி வேட்பாளர்:

2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையேற்கும்  தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்திலும் , வாரணாசி தொகுதியில் 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பின்னர் மக்களவைக்குழு தலைவராக பொறுப்பேற்று பிரதமாக பதவியேற்றார் மோடி.

2019 மக்களவைத் தேர்தல் : 

2019 ஆம் ஆண்டு நடந்த 17 ஆவது மக்களவைத்தேர்தலில் வாரணாசியில் 6, 74, 664 வாக்குகள் பெற்று 4, 79, 505 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியடைந்தார். இரண்டாவதாக வந்த சமாஜ்வாதி கட்சியின் சாலினி யாதவ் 1,95,159 வாக்குளும் , மூன்றாவதாக வந்த காங்கிரசின் அசய் ராய் 1, 52, 548 வாக்குகளும் பெற்றனர்.

இந்தியப் பிரதமர் : 

முதல் முறை :

இரண்டாம் முறை :

2019 ஏப்ரல் மாதம் நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நரேந்திர மோடி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராக 30 மே 2019 அன்று பதவி ஏற்றார். 

அதிரடி நடவடிக்கை : 

அமைச்சர்கள் அனைவரும் முதல் 100 நாட்களுக்குரிய தமது திட்ட அட்டவணையை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து அமைச்சர்களையும், அமைச்சகத்தின் செயலர்களையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.தனது வாழ்க்கைக் கதையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பயணம் : 

அரசுமுறைப் பயணமாக இதுவரை 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் முடிய ஓராண்டில் மட்டும் 16 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்கான மொத்த செலவு 37 கோடிகள் ஆகும். இதில் ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இதில் அதிக செலவாக  ஆஸ்திரோலியா  சென்றதற்கு 8.91 கோடிகளும், குறைந்த செலவாக பூடான் சென்று வந்ததற்காக 41.33 லட்சங்களும் செலவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |