ஆசிரியர் வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் கடல்கன்னி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் தஞ்சாவூரில் இருக்கும் எழுபட்டி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக கடல் கன்னி வேலை பார்த்து வருகிறார். அதன் பின் கடல் கன்னி வெளியே சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகைகள் மற்றும் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர்.
இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த கடல் கன்னி மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதை அறிந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.