Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிலிருந்து உடனே கிளம்புங்கள்!”.. விமானம் அனுப்பி தங்கள் மக்களை வரவழைக்கும் பிரான்ஸ்..!!

பிரான்ஸ் அரசு ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் உடனே அங்கிருந்து வெளியேற வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டவுடன், தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவருகிறது. இந்நிலையில் தற்போது, பிரான்ஸ் அரசு வரும் 17ஆம் தேதி அன்று தங்கள் குடிமக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற ஒரு சிறப்பு விமானத்தை அனுப்புகிறது.

எனவே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் காபூலிலிருந்து செல்லும் இந்த விமானத்தில் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் பயணிக்க கட்டணம் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்பும் அங்கு வசிக்கும் தங்கள் மக்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |