பிரதமர் மோடியில் பிறந்தநாளான (17.09) முன்னிட்டு அதற்கான சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம்.
கிராமத்து ஒரு குக்கிராமத்தில் ஏழ்மையாக பிறந்து உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமரான நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் சின்னஞ்சிறு வயதில் ரயில் நிலையத்திலிருந்து டீ விற்றது தொடர்ந்து இரண்டாம் முறையாக பாரத பிரதமராக வெற்றி பெற்றது வரை அவர் கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது என்பது குறித்து விவரிப்பதே இந்த செய்தி தொகுப்பு.
மோடியின் பிறப்பு :
நரேந்திர மோடி என்று எல்லோரும் அழைக்கப்படும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள்1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17_ஆம் நாள் இந்தியாவின் குஜராத் மாநிலம் மேசானமா மாவட்டத்தில் உள்ள வாட் நகர் எனும் இடத்தில் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் கீரபேன் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தார்.இவருக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர்.
இந்து மதத்தின் மீது ஈர்ப்பு :
சிறுவயதில் தந்தையுடன் வாட் நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்று வந்தார் மோடி. பின்னாளில் தனது சகோதரருடன் இணைந்து பேருந்து நிலையம் அருகில் தேனீர் கடை நடத்தி உள்ளார். வாட் நகர் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் தேனீர் விற்றுக் கொண்டு இருக்கும் போது அதில் பயணிக்கும் சன்னியாசிகள் உடன் பேசியதன் மூலம் இந்து மதத்தின் மீது தீராக்காதல் உருவாகியது. அதேபோல் அந்த ரயிலில் பயணிக்கும் ராணுவ வீரர்களுக்கு தேநீர் கொடுத்த போது அவர்கள் மீது தனி ஒரு மரியாதை உருவாகியுள்ளது. ராணுவத்தின் மீது உள்ள பற்றின் காரணமாக மோடி ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தன் ஆசையை வீட்டில் தெரிவிக்கிறார்.
திருமணத்தால் வீட்டை காலி செய்த மோடி :
மோடி ராணுவத்திற்கு செல்லவேண்டும் என்று விரும்பியதற்கு மோடி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு ,அந்தப் பகுதியிலிருக்கும் யசோதா பென் என்ற சிறுமியுடன் திருமணம் செய்து வைத்தனர்.அவர்களின் பெற்றோர்கள் மோடிக்கு செய்து வைத்த திருமணத்தால் மனமுடைந்த மோடி , வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு மோடிக்கு வயது 17. அந்த நேரத்தில் அவர் வாட் நகரில் தனது மேல்நிலை கல்வியை முடித்து இருந்தார். திருமணத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மோடி , அடுத்த இரண்டு வருடங்கள் வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.
மோடியில் கல்வி :
வீட்டை வீட்டு வெளியேறிய மோடி இடைப்பட்ட காலங்களில் அவர் எங்கு சென்றார் , என்ன செய்தார் என்பது குறித்து எந்தவிதமான தகவல்களும் இல்லை. அதன் பின் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் தன் சொந்த ஊருக்கே திரும்பிய மோடி தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலமாக டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பிறகு குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் , அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.