தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு அதிகாரி கடையிலிருந்து பொருட்களை திருடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் கைதானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல பகுதிகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் 72 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிலர் கடைகளை அடித்து நொறுக்கி அதிலிருந்து பொருட்களை திருடி வருகிறார்கள்.
இந்நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு கடையிலிருந்து, பால், சமையல் எண்ணெய் மற்றும் ரொட்டி போன்றவற்றை எடுத்து தன் வாகனத்தில் மறைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ஒரு பெண் மொபைலில் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த பெண், “ஒரு காவல்துறை அதிகாரி, சீருடையில் இருந்துகொண்டே இவ்வாறு செய்கிறார்.
என்ன அழகு, இதுதான் எங்கள் தென்னாப்பிரிக்க காவல்துறை” என்று கூறுகிறார். அப்போது அந்த காவல்துறை அதிகாரி பதற்றமாக திகைத்துப்போய் நிற்கிறார். அதாவது நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து முன்னாள் அதிபர் Jacob Zuma-வின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.