பேருந்தில் தீடிரென குண்டு வெடித்ததால் 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பாகிஸ்தானிலுள்ள ஹைபர் பக்துன்வா மாகாணத்தில் கொகிஸ்தான் என்ற இந்த இடத்தில் தாசு நீர்மின் நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிக்காக இன்று காலை பெர்சி முகாமில் இருந்து ஒரு பேருந்தில் பணியாளர்கள் வந்துள்ளனர். அந்தப் பேருந்தில் சீன இன்ஜினியர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 30 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென பேருந்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் சீன இன்ஜினியர் மற்றும் வீரர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை தாசு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சீனா பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளது.