பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆடை அணிகலன் உள்ளிட்ட இலவச பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரித்தல், ஆடை அணிகலன்கள் தயாரிப்பு மற்றும் கணினி கணக்கியல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் இலவசமாக இம்மாத இறுதியில் அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி பெறுவதற்கு 18 முதல் 45 வயதிற்கு குறைவாக, எழுதப் படிக்கத் தெரிந்த புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பின் முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழி காட்டப்படும். இதில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையை அணுகவும்.