Categories
தேசிய செய்திகள்

ம.பி.,யில் ஜூலை 25-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு…. முதல்வர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கி விட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 25 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். கொரோனா குறைந்ததால் 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |