வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து உயரத்திற்கு வந்த கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் வரலாறு.
கூகுள் மற்றும் ஆல்பபெட் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கரக்பூரில் உள்ள ஐஐடி-யில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவரும் ஐஐடியில் இளங்கலை பொறியியல் மாணவர்களாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நண்பர்களாக இருந்தனர். இதில் நீண்டநாள் அஞ்சலியிடம் நட்பாக பழகி வந்த சுந்தர் பிச்சைக்கு அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது . இதன் பிறகு ஒருநாள் தனது காதலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு அஞ்சலியும் சம்மதம் தெரிவித்த நிலையில் இருவரும் பல்கலைக்கழக இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் நிச்சயம் முடிந்த பிறகு சுந்தர்பிச்சை ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இதன்பிறகு நீண்ட நாள் கழித்து இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வணிக செயல்பாட்டு மேலாளராக பணிபுரிந்து வருகின்றார்.
இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர்கள் காதலிக்கும் போது ஐஐடி-யில் படித்துக்கொண்டிருந்த சுந்தர் பிச்சை ஒரு சாதாரண மாணவராகவே தன்னுடைய படிப்பைத் தொடங்கினார் .அப்போது ஒரு சிறிய வீட்டில் டிவி ,கார் எதுவும் இல்லாமல் வசித்து வந்துள்ளார். ஆனால் சுந்தர் பிச்சையின் நிலைமை தெரிந்தும் அஞ்சலி அவருடைய காதலை ஏற்றுக் கொண்டார். தற்போது முன்னணி பணக்காரர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை திகழ்கின்றார். இதன் மூலம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி ஏற்படும் உறவு நிச்சயம் ஒருநாள் உயரத்தை எட்டும் என்பதற்கு இவர்கள் ஒரு உதாரணமாக விளங்குகின்றன.