Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ‘வலிமை’ மோஷன் போஸ்டர் படைத்த மாஸ் சாதனை… தெறிக்கவிடும் புதிய போஸ்டர்…!!!

வலிமை பட மோஷன் போஸ்டர் வெளியான இரண்டே நாட்களில் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . வலிமை படத்தின் அப்டேட்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இரு தினங்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது .

இந்நிலையில் வலிமை பட மோஷன் போஸ்டர் வெளியான இரண்டே நாட்களில் யூடியூபில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து மாஸ் சாதனை படைத்துள்ளது . இதனை கொண்டாடும் விதமாக வலிமை படக்குழு இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர் . தல அஜித் பைக்கில் செம ஸ்டைலாக அமர்ந்திருக்கும் இந்த போஸ்டர்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .

Categories

Tech |