Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்….! வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்….!!

மகர ராசி அன்பர்களே.! முக்கிய முடிவுகள் இப்போதைக்கு எடுக்க வேண்டாம்.

இன்றைய நாள் உங்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் ஒப்பந்தங்களை படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவது நல்லது. சந்திராஷ்டமம் உங்களுக்கு நடப்பதினால் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். பொருளாதாரத்தில் கவனமாக இருங்கள். தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொலைபேசிகளில் நல்ல தகவல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சில முன்னேற்றமான சூழல் இருக்கின்றது. மற்றவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சந்தேக புத்தி வேண்டாம். ஒருவரிடம் கொடுத்து விட்டால் அந்த பணி முடியும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகள் மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கின்றது. செலவுகளை கட்டுபடுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.

மன அமைதி ஏற்படுத்திக்கொள்வது நல்லது. முக்கிய முடிவுகள் இப்போதைக்கு எடுக்க வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பணம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடன் வாங்க வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். ஆனால் சில நேரங்களில் மனக் கஷ்டத்தை உருவாக்கும். இன்று மாணவர்களுக்கு எதையும் தைரியமாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. மாணவர்கள் சிறப்பாக எதையும் செய்ய முடியும். கல்விக்காக நேரம் மட்டும் ஒதுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் மென்மேலும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 8                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறம்

Categories

Tech |