சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ் திரையுலக முன்னணி நடிகரான விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் எனும் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். ஆனால் நடிகர் விஜய் அந்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாமல் இருப்பதற்கான விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ரூ.1 லட்சம் அபராதத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் “நிஜ வாழ்வில் சினிமா ஹீரோக்கள் ரியல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வரி செலுத்துவது என்பது நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு, அது நன்கொடை போன்றது அல்ல என்று தெரிவித்த நீதிபதி நடிகர் விஜய் கொரோனா நிவாரண நிதிக்கு முதலமைச்சரிடம் அபராத தொகையினை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.