கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பாலை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சந்தோஷ் படியில் இறங்கியபோது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்தோஷ் நீரில் மூழ்கியதால் அவருடைய நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் சந்தோஷ் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.