Categories
உலக செய்திகள்

“என்னது!:. சமைக்க நேரமில்லையா..? ஆரோக்கியமற்ற உணவை எத்தனை பேர் உண்கிறார்கள்..? வெளியான தகவல்..!!

உலக அளவில் சுமார் 300 கோடி மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது.

உலக அளவில் உணவு பொருட்களின் விலை தொடர்பில் புள்ளிவிவர ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது கொரோனா காரணமாக உணவு பொருட்களின் விலை அதிகரித்து விட்டதால் ஆரோக்கியமுள்ள உணவுகளை வாங்க முடியாத நிலையில் சிலர் இருக்கிறார்கள்.

எனினும் கொரோனா ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியமான உணவு பெறமுடியாத நிலையில் அவர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, கடந்த 2017 ஆம் வருடத்தில் உலகில் உள்ள மொத்த மக்களில் சுமார் 40% நபர்கள் தரமற்ற உணவுகளை சாப்பிடும் நிலையில் இருக்கின்றனர். 300 கோடி நபர்கள் இவ்வாறு உள்ளார்கள்.

இதற்கு சாப்பாட்டின் விலை அதிகமாக இருப்பதும், அவர்கள் குறைந்த வருமானம் பெறுவதுமே காரணம். அதே நேரத்தில் மீதமுள்ள 790 கோடி நபர்களால் ஆரோக்கியமுள்ள உணவை பெறமுடியும். எனினும் சமையல் செய்ய நேரமில்லாத காரணத்தால் ஆரோக்கியமில்லாத உணவுகளை வாங்கி உண்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |