ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் தீடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ராமாத்தாளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், ஆதிதிராவிடரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைத் தலைவரான துரைவளவன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக பேரவை நிறுவனர், விடுதலை சிறுத்தை கட்சியினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதன்பிறகு இவர்கள் தங்களின் கோரிக்கைகளை ஒரு மனுவாக எழுதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ளனர்.