Categories
உலக செய்திகள்

கரோவே சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட …. 2-வது மிகப்பெரிய வைரம் ….!!!

போஸ்ட்வானா நாட்டில் உள்ள  சுரங்கம் ஒன்றில் மிகப்பெரிய வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்வானா நாட்டில் கரோவே சுரங்கத்தில் கனடாவை சேர்ந்த சுரங்க நிறுவனம் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்தது .அப்போது சுரங்கம் தோண்டும்போது மிகப்பெரிய வைரம் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் கிடைத்த வைரங்களில் 2-வது மிகப்பெரிய வைரம் இதுவாகும். இந்த வைரமானது உயர்தரம் மிக்க வெள்ளைக் கல் வகையை சேர்ந்தது.

மேலும் இது 7.7 மற்றும் 5.5 சென்டிமீட்டர் நீள அகலம் கொண்டுள்ளது. இது கரோவே சுரங்கத்தில்  இந்த 1,174 கேரட் வைரம் கிடைத்தாக அந்நாட்டு அதிபர் மெக்வீட்சி மாசிஸ் கூறியுள்ளார். அத்துடன் கடந்த மாதத்தில் மட்டும்  போஸ்ட்வானா சுரங்கத்திலிருந்து 1,098 கேரட் வைரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |