பிரான்ஸ் அரசாங்கம், டெல்டா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகளை கையாண்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஷாப்பிங் மால், மருத்துவமனை, நீண்ட தூர ரயில் பயணம் மற்றும் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறப்பு கொரோனா சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று பிரதமர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.
இந்த கொரோனா சான்றிதழ் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது அல்லது சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை காட்டும். 12 வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் திரையரங்கம், தீம்பார்க், அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார மையம் ஆகிய மக்கள் கூடும் பகுதிகளுக்கு செல்ல இந்த சான்றிதழ் அவசியம்.
மேலும் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை விரைவில் செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது. வரும் 21ம் தேதியிலிருந்து இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வரும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் ஓய்வூதிய இல்லங்களில் இருக்கும் பணியாளர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஒத்துழைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாட்டில் 40% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஒரே நாளில் குறைந்திருக்கிறது.