குடும்பத்தகராறு காரணத்தால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போடூர் போயர் காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத சமயத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி சங்கீதாவின் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி விரைவாக சென்ற காவல்துறையினர் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமாகி ஐந்து ஆண்டுக்குள் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.