இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிக்கும் வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார் .
தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர்- காயத்ரி இயக்கியிருந்தனர் . தற்போது இந்த படம் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், சயிப் அலிகான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர்கள் புஷ்கர்- காயத்ரி ஓடிடி பிளாட்பாரத்திற்காக தயாரிக்கும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .
இந்த தொடரில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் . மேலும் விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்தை இயக்கி பிரபலமடைந்த ஆண்ட்ரூ இந்த தொடரை இயக்க இருக்கிறார் . அடுத்த வாரம் சென்னையில் இந்த தொடரின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது .