நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள அணியாபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு கோழிப்பண்ணையில் வடமாநிலத்தை சேர்ந்த சுதீஷ் யாதவ் என்பவர் அவரது மகன் அங்குகுமாருடன்(15) தங்கி வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கோழிப்பண்ணையில் அவரது உறவினர் பிஜேத்(28) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து சுதீஷ் சொந்த ஊரான வடமாநிலத்திற்கு செல்வதால் அங்குகுமாரை பிஜேத்துடன் இருக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் அங்குகுமார் கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த மின்வயரை மிதித்ததில் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்குகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மோகனூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.