அமெரிக்காவைச் சேர்ந்தவர் ரெயன் தாம்சன். இவர் டெலிவரி நிறுவனமொன்றில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கெய்லான் தாம்சன் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில் இவருடைய மனைவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவருக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து தாம்சன் அவரை காரில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். ஆனால் அப்போது டிராபிக் ஜாம் கடுமையானது.
இதனால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நெருக்கடியில் சிக்கினார். அப்போது கெய்லாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் ரெயான் அவசர உதவி எண்ணுக்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்குள் குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று அறியாத அவர் தன்னுடைய மனைவிக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார். நடுரோட்டில் டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் தன்னுடைய மனைவிக்கு டெலிவரி பாய் டெலிவரி பார்த்த சம்பவம் பெரும் வைரலாக பரவி வருகிறது.