தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறது. மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா நிவாரண தொகை, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கேஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ 100, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், விவசாயக் கடன், நகை கடன் தள்ளுபடி கல்விக் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் எப்போது வரும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது,
இதற்கு மத்தியில் நிதிநிலைமை மோசமாக இருப்பதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலையை உயர்வை இப்போதைக்கு குறைக்க முடியாது என்று நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் மற்ற அறிவிப்புகளாவது நிறைவேற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் விவசாய கடன், நகை கடன், கல்விக் கடன் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.