சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழை இலையின் விலை சரிந்து வருவதாக வியாபாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் திருமணம், கோவில் விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுவதில்லை. இதனால் பல வர்த்தகங்களும் பாதித்ததோடு வாழை இலையின் வர்த்தகமும் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த வாழை இலை வியாபாரி கூறியபோது, 10 ஆண்டுகளுக்கும் மேல் வாழை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், ஆலாந்துறை, மாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து வாழை இலைகள் வியாபாரத்திற்கு கொண்டு வரப்படுகின்றது.
எனவே ஊரடங்கிற்கு முன்பு ஒரு கட்டு இலை 350 ரூபாயும், டிபன் இலை 250 ரூபாயும், தலைவாழை இலை 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ஊரடங்கினால் ஓட்டல்கள், திருமணம், விழாக்கள் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் வாழை இலை பயன்கள் குறைந்து வருகின்றது. இதனால் தற்போது ஒரு கட்டு சாப்பாடு 300 ரூபாயும், டிபன் இலை 200 ரூபாயும், தலைவாழை இலை 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இவ்வாறு தட்டுப்பாடு குறைந்ததால் விலையும் சரிந்து வருகிறது. ஆனால் ஊரடங்கிற்கு முன்பு வரை தினசரி 50 முதல் 70 கட்டுகள் விற்கப்படும். ஆனால் தற்போது நாள் முழுவதும் வியாபாரம் செய்தாலும் 10-க்கும் குறைவான கட்டுகளே விற்கப்படுகின்றது என்று வியாபாரி தெரிவித்துள்ளார். எனவே விழாக்கள், திருமணம் போன்றவை வழக்கம்போல் நடைபெற்றால் தான் வாழை இலையின் விற்பனையும் அதிகமாகும் என்று வியாபாரி தெரிவித்துள்ளார்.