தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “ஓடலாம் நோயின்றி வாழலாம்” என்ற தலைப்பில் சென்னை கிண்டி லேபர் காலனி முதல் மெரினா கடற்கரை வரை நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், டெங்கு காய்ச்சலின் தொடர்ச்சி தான் ஜிகா வைரஸ் காய்ச்சல். இது கேரளாவில் வேகமாகப் பரவி வருகிறது.
அதை தமிழகத்தில் தடுப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இனி பகொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு வராது. ஏற்கனவே தமிழகத்திற்கு வந்துள்ள 5 லட்சம் தடுப்பூசிகளையும், தற்போது வரவுள்ள 3 லட்சம் தடுப்பூசிகளையும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி மக்களுக்கு போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.