சேலத்தில் வசித்து வரும் சித்ரா என்ற பெண் கணவனை இழந்து தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர் அடிக்கடி சித்ராவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இது ஆரம்பம் முதலே சித்ராவின் மகளுக்கு பிடிக்காமல் இருந்தது. இந்நிலையில் மகள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கியதால், ஏழுமலையை தங்களது வீட்டிற்கு இனிமேல் வர வேண்டாம் என்று சித்ரா கூறியுள்ளார்.
இதைக் கேட்காமல் மேலும் அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் ஏழுமலைக்கும் சித்ராவுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு இன்று முற்றவே ஏழுமலை சித்ராவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டார். இதைப் பார்த்த அவரது மகள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை தேடி வருகின்றனர்.