தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளன.
அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ” அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் விவாதங்கள் நடத்தப்படுகின்றது. எனவே ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மக்களில் அடிப்படை தேவைகளை பற்றி கருத்தில் கொள்ளாமல் அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், ஊடக அறத்திற்கு எதிராக மனம்போன போக்கிலும், அதிமுக தலைவர்களை இழிவுப்படுத்தும் விதத்திலும் ஊடகங்கள் செயல்படுகின்றன.
எனவே தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும் படி யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துக்களைத் தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம்” எனவும் இருவரும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.