யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில், இங்கிலாந்து, கோப்பையை தவறவிட்டதால், பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜார்ஜ் சோகத்தில் மூழ்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
யூரோ கால்பந்து இறுதி போட்டியானது, பல்வேறு மக்களின் எதிர்பார்ப்புடன் ஆரவாரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதனைக்காண பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மகன் இளவரசர் ஜார்ஜ், தன் பெற்றோருடன் வந்திருந்தார். அவர் பல ஆயிரம் பிரிட்டன் மக்களின் உணர்வுகளை தன் முகத்தில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.
இங்கிலாந்து அணியானது, ஜெர்மனியை வென்று இத்தாலியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. எனவே பிரிட்டன் மக்கள் உச்சகட்ட கொண்டாட்டத்துடன் ஆர்வமாக போட்டியை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது 1-1 என்ற கோல் எடுத்து ஆட்டம் முடிவடைந்தது.
எனவே பெனால்டியை வைத்து முடிவெடுக்க தீர்மானம் செய்யப்பட்டது. இதில் இங்கிலாந்து வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பினர். எனவே இத்தாலி வெற்றி கோப்பையை கைப்பற்றியது. உற்சாகமாக பார்த்துக்கொண்டிருந்த பிரிட்டன் மக்கள் மொத்தமாக வருத்தத்தில் மூழ்கினார்கள்.
அப்போது, உற்சாகமாக சிரித்துக்கொண்டிருந்த இளவரசர் ஜார்ஜ்-ன் முகம் வாடிப்போனது. எனவே அவரின் தந்தையான இளவரசர் வில்லியம் அவரை தேற்றிக் கொண்டிருந்தார். அப்போது இளவரசி கேட், வருத்தத்தால் கைகளை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டார். தற்போது வெளியான புகைப்படங்கள், அவர்களின் பலவித உணர்வுகளை காட்டுகிறது.