ரயில் நிலையம் அருகில் கருவேலமரங்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகின்றது. எனவே தற்போது அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணி நடைபெற்று வரும் நிலையில் அருகில் உள்ள கருவேல மரங்கள் இரவு திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.
அதன்பின் தீ தானாகவே அணிந்தாலும் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுப்பதற்கு ரயில்வே நிலையம் பகுதிகளில் காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.