ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சசிகலா திருவாடானை யூனியன் பகுதியில் உள்ள கொடிபங்கு ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு .செய்துள்ளனர், அப்போது அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் கொடிபங்கு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய ஆழ்குழாய் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுவை பரிசீலனை செய்த ஆட்சியர் ஒன்றிய பொதுநிதியில் இருந்து 21 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து கிராமங்களில் தனி தனியாக ஆழ்குழாய் அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கொடிபங்கு கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை யூனியன் தலைவர் முகமது முக்தார் தொடங்கி வைத்துள்ளார். மேலும் கொடிபங்கு ஊராட்சி தலைவர் சாந்தி ரவிசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் லூர்துமேரி பிரசாந்த், சிவசங்கீதா, ராஜாராம், திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.